செந்தமிழ்.org

உறைகின்ற

அபிராமி அந்தாதி
உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.

என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ
வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின்
ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ?
அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி
வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ
அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ?
தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!