செந்தமிழ்.org

உமையும்

அபிராமி அந்தாதி
உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.

அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும்,
ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு
அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும்
அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு
ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை.
வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த
ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.