செந்தமிழ்.org

உடைத்தனை

அபிராமி அந்தாதி
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம்,
கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய்.
பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த
யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு
அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம்
துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு
வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!