செந்தமிழ்.org

ஆசைக்

அபிராமி அந்தாதி
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக
அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக்
கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன்.
அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய
பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே!
நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!