Senthamil.Org

வன்னி

தேவாரம்

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.
வன்னி கொன்றை மதியொடு கூவிளஞ் 
சென்னி வைத்த பிரான்திரு ஆரூரை 
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்வாய்ப் 
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.
வன்னி மத்தம் வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் புஜர்க்கரக் கோயிலே.
வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலை 
உன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல் 
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன் 
கன்னி மாமதிற் கானுர்க் கருத்தனே.
வன்னி எனத்தொடங்கும் தேவாரம்