Senthamil.Org

வந்துசொல்லுமின்

தேவாரம்

வந்துசொல்லுமின் மூடனேனுக்கு 
வல்லவாநினைந் தேத்துவீர் 
வந்தசாயினை அறிவரோதம்மை 
வாழ்த்தினார்கட்கு நல்லரோ 
புந்தியாலுரை கொள்வரோஅன்றிப் 
பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ 
அன்றியேமிக அறவரோநமக் 
கடிகளாகிய அடிகளே.
வந்துசொல்லுமின் எனத்தொடங்கும் தேவாரம்