Senthamil.Org

வண்டுலவு

தேவாரம்

வண்டுலவு கொன்றை வளர்புன் 
சடையானே என்கின் றாளால் 
விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க 
நாண்மலருண் டென்கின் றாளால் 
உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப் 
பட்டுடையன் என்கின் றாளாற் 
கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச் 
சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
வண்டுலவு எனத்தொடங்கும் தேவாரம்