Senthamil.Org

வண்டாடு

தேவாரம்

வண்டாடு புஜங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலத் தானன் கண்டாய்
கொண்டாடு மடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
வண்டாடு எனத்தொடங்கும் தேவாரம்