Senthamil.Org

வண்டமர்

தேவாரம்

வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம் 
முழுதுண்ட மாலும் இகலிக் 
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும் 
அறியாத சோதி பதிதான் 
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து 
விரைதேரப் போது மடுவிற் 
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து 
வயல்மேவு கொச்சை வயமே.
வண்டமர் எனத்தொடங்கும் தேவாரம்