Senthamil.Org

வண்டணை

தேவாரம்

வண்டணை கொன்றை வன்னியு மத்தம் 
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க 
கொண்டணி சடையர் விடையினர் புஜதங் 
கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப் 
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் 
பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல் 
வெண்பிறை சூடி உமையவ ளோடும் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
வண்டணை கொன்றையும் வன்னியும் 
மத்தமும் வாளரவுங் 
கொண்டணைந் தேறு முடியுடை 
யான்குரை சேர்கழற்கே 
தொண்டணைந் தாடிய சோற்றுத் 
துறையுறை வார்சடைமேல் 
வெண்டலை மாலையன் றோவெம் 
பிரானுக் கழகியதே.
வண்டணை எனத்தொடங்கும் தேவாரம்