Senthamil.Org

வணங்கித்தொழு

தேவாரம்

வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும் 
வானவர் தானவர் மாமுனிவர் 
உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே 
உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர் 
இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய 
இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம் 
அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை 
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
வணங்கித்தொழு எனத்தொடங்கும் தேவாரம்