Senthamil.Org

மோத்தையைக்

தேவாரம்

மோத்தையைக் கண்ட காக்கை 
போலவல் வினைகள் மொய்த்துன் 
வார்த்தையைப் பேச வொட்டா 
மயக்கநான் மயங்கு கின்றேன் 
சீத்தையைச் சிதம்பு தன்னைச் 
செடிகொள்நோய் வடிவொன் றில்லா 
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் 
உணர்வுதா உலக மூர்த்தீ.
மோத்தையைக் எனத்தொடங்கும் தேவாரம்