Senthamil.Org

மையி

தேவாரம்

மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறுங்
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.
மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் புஜசும் மார்பனைப்
பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
மையி எனத்தொடங்கும் தேவாரம்