Senthamil.Org

மையார்

தேவாரம்

மையார் மணிமிடறன் மங்கையோர் 
பங்குடையான் மனைக டோ றும் 
கையார் பலியேற்ற கள்வன் 
இடம்போலுங் கழல்கள் நேடிப் 
பொய்யா மறையானும் புஜமி 
யளந்தானும் போற்ற மன்னிச் 
செய்யார் எரியாம் உருவ 
முறவணங்குந் திருந ணாவே.
மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீறேறு தோளெட் டுடையார் போலும்
வையார் மழுவாட் படையார் போலும்
வளர்ஞாயி றன்ன ஒளியார் போலும்
ஐவா யரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே 
பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய் 
கையார் ஆடரவா கடவுஜர்தனுள் வீரட்டத்தெம் 
ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
மையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும் 
மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை 
கையார் வளைக்காடு காளோடும் உடனாய்க் 
கொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே.
மையார் எனத்தொடங்கும் தேவாரம்