Senthamil.Org

மைம்மலர்க்

தேவாரம்

மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் 
மலைமக ளவளொடு மருவின ரெனவும் 
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ் 
சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார் 
தம்மல ரடியொன் றடியவர் பரவத் 
தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர 
அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
மைம்மலர்க் எனத்தொடங்கும் தேவாரம்