Senthamil.Org

மைச்செறி

தேவாரம்

மைச்செறி குவளை தவளைவாய் நிறைய 
மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப் 
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப் 
பதியவ ரதிபதி கவுணியர் பெருமான் 
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் 
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண் 
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும் 
அன்புடை யடியவர் அருவினை யிலரே.
மைச்செறி எனத்தொடங்கும் தேவாரம்