Senthamil.Org

மைகொள்

தேவாரம்

மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர் 
பைகொள் வாளர வாட்டும் படிறனார் 
கைகொள் மான்மறி யார்கடற் காழியுள் 
ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே.
மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணினன்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ.
மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி 
பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனுர் 
செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன் 
றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே.
மைகொள் கண்டர்எண் டோ ளர் 
 மலைமக ளுடனுறை வாழ்க்கைக் 
கொய்த கூவிள மாலை 
 குலவிய சடைமுடிக் குழகர் 
கைதை நெய்தலங் கழனி 
 கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள் 
பைதல் வெண்பிறை யோடு 
 பாம்புடன் வைப்பது பரிசே.
மைகொள் எனத்தொடங்கும் தேவாரம்