Senthamil.Org

மேலது

தேவாரம்

மேலது நான்முக னெய்திய தில்லை 
கீழது சேவடி தன்னை 
நீலது வண்ணனு மெய்திய தில்லை 
எனவிவர் நின்றது மல்லால் 
ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி 
லாச்சிரா மத்துறை கின்ற 
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப் 
பழிசெய்வ தோவிவர் பண்பே.
மேலது எனத்தொடங்கும் தேவாரம்