Senthamil.Org

மெய்யெலாம்

தேவாரம்

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த 
மேனியான் தாள்தொ ழாதே 
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி 
யுழிதந்தென் உள்ளம் விட்டுக் 
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ 
மயிலாலும் ஆரூ ரரைக் 
கையினாற் றொழா தொழிந்து 
கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.
மெய்யெலாம் எனத்தொடங்கும் தேவாரம்