Senthamil.Org

மெய்யென்சொல்லுமின்

தேவாரம்

மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக் 
கிசையுமாநினைந் தேத்துவீர் 
கையிற்சூலம துடையரோகரி 
காடரோகறைக் கண்டரோ 
வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை 
ஏறரோகடை தோறுஞ்சென் 
றையங்கொள்ளுமவ் வடிகளோநமக் 
கடிகளாகிய அடிகளே.
மெய்யென்சொல்லுமின் எனத்தொடங்கும் தேவாரம்