Senthamil.Org

மெய்ப்பால்வெண்

தேவாரம்

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை
உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.
மெய்ப்பால்வெண் எனத்தொடங்கும் தேவாரம்