Senthamil.Org

மூமும்மையால்

தேவாரம்

மூமும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் 
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் 
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் 
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் 
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க 
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த 
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் 
ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே. 
 
மூவிபுஜதி, ருத்திராட்சம், சடைமுடி இவைகளுடன் அரசு 
செய்தமையால் மும்மையால் உலகாண்ட மூர்த்தியென்றது.
மூமும்மையால் எனத்தொடங்கும் தேவாரம்