Senthamil.Org

முடிகையி

தேவாரம்

முடிகையி னாற்றொடும் மோட்டுழவர் 
முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக் 
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி 
காதல்செய் தான்கரி தாயகண்டன் 
பொடியணி மேனியி னானையுள்கிப் 
போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின் 
றடிகையி னாற்றொழ வல்லதொண்டர் 
அருவினை யைத்துரந் தாட்செய்வாரே.
முடிகையி எனத்தொடங்கும் தேவாரம்