Senthamil.Org

மீளா

தேவாரம்

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் 
 பிறரை வேண்டாதே 
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று 
 முகத்தால் மிகவாடி 
ஆளா யிருக்கும் அடியார் தங்கள் 
 அல்லல் சொன்னக்கால் 
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் 
 வாழ்ந்து போதீரே.
மீளா எனத்தொடங்கும் தேவாரம்