மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத் தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே.