மிகப்பெருத் துலாவ மிக்கா னக்கொரு தேர்க டாவி அகப்படுத் தென்று தானும் ஆண்மையால் மிக்க ரக்கன் உகைத்தெடுத் தான்ம லையை ஊன்றலும் அவனை யாங்கே நகைப்படுத் தருளி னானுர் நான்மறைக் காடு தானே.