Senthamil.Org

மாவாய்ப்

தேவாரம்

மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய
மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
முதுகுன்ற மூதூ ருடையார் போலுங்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்
குரைகழலா லன்று குமைத்தார் போலுந்
தேவாதி தேவர்க் கரியார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும் 
ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார் 
புஜவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த் 
தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
மாவாய்ப் எனத்தொடங்கும் தேவாரம்