Senthamil.Org

மாலைத்

தேவாரம்

மாலைத் தோன்றும் வளர்மதியை 
மறைக்காட் டுறையும் மணாளனை 
ஆலைக் கரும்பி னின்சாற்றை 
அண்ணா மலையெம் அண்ணலைச் 
சோலைத் துருத்தி நகர்மேய 
சுடரிற் றிகழுந் துளக்கிலியை 
மேலை வானோர் பெருமானை 
விருப்பால் விழுங்கி யிட்டேனே.
மாலைத் எனத்தொடங்கும் தேவாரம்