மாலுமலர் மேலயனும் நேடியறி யாமையெரி யாய கோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும் நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்புஞ் சீலமுடை யார்கள்நெடு மாடம்வள ருந்திருந லூரே.