Senthamil.Org

மாற்றமொன்

தேவாரம்

மாற்றமொன் றருள கில்லீர் 
மதியிலேன் விதியி லாமை 
சீற்றமுந் தீர்த்தல் செய்யீர் 
சிக்கன வுடைய ராகிக் 
கூற்றம்போல் ஐவர் வந்து 
குலைத்திட்டுக் கோகு செய்ய 
ஆற்றவுங் கில்லேன் நாயேன் 
ஆரூர்மூ லட்ட னீரே.
மாற்றமொன் எனத்தொடங்கும் தேவாரம்