Senthamil.Org

மாறு

தேவாரம்

மாறு தன்னொடு மண்மிசை யில்லது 
வருபுனல் மாகாளத் 
தீறும் ஆதியு மாகிய சோதியை 
ஏறமர் பெருமானை 
நாறு புஜம்பொழில் காழியுள் ஞானசம் 
பந்தன தமிழ்மாலை 
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் 
குற்றங்கள் குறுகாவே.
மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர் 
வேறு வேறு படுப்பதன் முன்னமே 
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க் 
கூறி யூறி உருகுமென் னுள்ளமே.
மாறு பட்ட வனத்த கத்தில் 
மருவ வந்த வன்க ளிற்றைப் 
பீறி இட்ட மாகப் போர்த்தீர் 
பெய்ப லிக்கென் றில்லந் தோறுங் 
கூறு பட்ட கொடியும் நீருங் 
குலாவி ஏற்றை அடர ஏறி 
வேறு பட்டுத் திரிவ தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே.
மாறு எனத்தொடங்கும் தேவாரம்