Senthamil.Org

மாயனாய்

தேவாரம்

மாயனாய் மால னாகி 
மலரவ னாகி மண்ணாய்த் 
தேயமாய்த் திசையெட் டாகித் 
தீர்த்தமாய்த் திரிதர் கின்ற 
காயமாய்க் காயத் துள்ளார் 
காஞ்சிமா நகர்தன் னுள்ளால் 
ஏயமென் றோளி பாகர் 
இலங்குமேற் றளிய னாரே.
மாயனாய் எனத்தொடங்கும் தேவாரம்