Senthamil.Org

மாதி

தேவாரம்

மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
போதி லங்கம லமது வார்புனற் புஜந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே.
மாதி லங்கிய பாகத்தன் மதியமொ 
டலைபுனல் அழல்நாகம் 
போதி லங்கிய கொன்றையும் மத்தமும் 
புரிசடைக் கழகாகக் 
காதி லங்கிய குழையினன் கடிக்குளத் 
துறைதரு கற்பகத்தின் 
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை 
பற்றறக் கெடுமன்றே.
மாதி னைமதித் தானொரு பாகமாக்
காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்
புஜத நாயகன் புஜந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.
மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல நீயெனக் காரெனுஞ்
சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நா னென்னுமென் தையலே.
மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
 மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும் 
வேத னைவேத வேள்வியர் வணங்கும் 
 விமல னையடி யேற்கெளி வந்த 
தூதனைத் தன்னைத் தோழமை அருளித் 
 தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும் 
நாத னைநள் ளாறனை அமுதை 
 நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
மாதி எனத்தொடங்கும் தேவாரம்