Senthamil.Org

மாதர்ப்

தேவாரம்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை 
மலையான் மகளொடும் பாடிப் 
போதொடு நீர்சுமந் தேத்திப் 
புகுவா ரவர்பின் புகுவேன் 
யாதுஞ் சுவடு படாமல் 
ஐயா றடைகின்ற போது 
காதன் மடப்பிடி யோடுங் 
களிறு வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் 
கண்டறி யாதன கண்டேன்.
மாதர்ப் எனத்தொடங்கும் தேவாரம்