Senthamil.Org

மாத

தேவாரம்

மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு மின்புக லாகுமே.
மாத னத்தைமா தேவனை மாறிலாக் 
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக் 
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.
மாத ரார்மரு வும்மங்க லக்குடி 
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன் 
வேத நாயகன் வேதியர் நாயகன் 
புஜத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
மாத எனத்தொடங்கும் தேவாரம்