Senthamil.Org

மாட்டினேன்

தேவாரம்

மாட்டினேன் மனத்தை முன்னே 
மறுமையை உணர மாட்டேன் 
மூட்டிநான் முன்னை நாளே 
முதல்வனை வணங்க மாட்டேன் 
பாட்டினாய் போல நின்று 
பற்றதாம் பாவந் தன்னை 
ஈட்டினேன் களைய மாட்டேன் 
என்செய்வான் தோன்றி னேனே.
மாட்டினேன் எனத்தொடங்கும் தேவாரம்