Senthamil.Org

மாட

தேவாரம்

மாட மல்கு மதில்சூழ் காழிமன் 
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர் 
நாட வல்ல ஞான சம்பந்தன் 
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.
மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.
மாட மாளிகை கோபுரங் கூடங்கள் 
மணியரங் கணிசாலை 
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் 
பரிசொடு பயில்வாய 
கூடு புஜம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
கேட தொன்றில ராகிநல் லுலகினிற் 
கெழுவுவர் புகழாலே.
மாட மல்கு கடவுஜரில் 
 மறையோ ரேத்தும் மயானத்துப் 
பீடை தீர அடியாருக் 
 கருளும் பெருமா னடிகள்சீர் 
நாடி நாவ லாரூரன் 
 நம்பி சொன்ன நற்றமிழ்கள் 
பாடு மடியார் கேட்பார்மேற் 
 பாவ மான பறையுமே.
மாட எனத்தொடங்கும் தேவாரம்