மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம் உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப் பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே.