Senthamil.Org

மழைக்கரும்

தேவாரம்

மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை 
 வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன் 
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் 
 பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார் 
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே 
 பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன் 
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக் 
 கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
மழைக்கரும் எனத்தொடங்கும் தேவாரம்