Senthamil.Org

மழைக்கண்மட

தேவாரம்

மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர் 
புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர் 
முழைக்கொள் அரவோ டென்பணி கலனா 
முழுநீறு மெய்புஜசுதல் என்னைகொலோ 
கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங் 
கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட் 
டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
மழைக்கண்மட எனத்தொடங்கும் தேவாரம்