மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச் செழுவார் செம்பொன் பள்ளி மேவிய எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத் தொழுவார் தம்மேல் துயர மில்லையே.