மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால் தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான் கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன் பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.
மல்கிய செஞ்சடை மேல்மதி யும்மர வும்முடனே புல்கிய ஆரணன் எம்புனி தன்புரி நுல்விகிர்தன் மெல்கிய விற்றொழி லான்விருப் பன்பெரும் பார்த்தனுக்கு நல்கிய நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.மல்கிய எனத்தொடங்கும் தேவாரம்