Senthamil.Org

மலையார்பொற்

தேவாரம்

மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ 
வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையால்முப் புரமெரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
மலையார்பொற் எனத்தொடங்கும் தேவாரம்