Senthamil.Org

மலைபல

தேவாரம்

மலைபல வளர்தரு புவியிடை 
மறைதரு வழிமலி மனிதர்கள் 
நிலைமலி சுரர்முதல் உலகுகள் 
நிலைபெறு வகைநினை வொடுமிகும் 
அலைகடல் நடுவறி துயிலமர் 
அரியுரு வியல்பர னுறைபதி 
சிலைமலி மதிள்சிவ புரம்நினை 
பவர்திரு மகளொடு திகழ்வரே.
மலைபல எனத்தொடங்கும் தேவாரம்