Senthamil.Org

மலமெலாமறும்

தேவாரம்

மலமெலாமறும் இம்மையேமறு 
மைக்கும்வல்வினை சார்கிலா 
சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள் 
சங்கரன்வந்து தங்குமூர் 
கலமெலாங்கடல் மண்டுகாவிரி 
நங்கையாடிய கங்கைநீர் 
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும் 
புறம்பயந்தொழப் போதுமே.
மலமெலாமறும் எனத்தொடங்கும் தேவாரம்