Senthamil.Org

மற்றுநீர்

தேவாரம்

மற்றுநீர் மனம்வை யாதே 
மறுமையைக் கழிக்க வேண்டிற் 
பெற்றதோர் உபாயந் தன்னாற் 
பிரானையே பிதற்று மின்கள் 
கற்றுவந் தரக்க னோடிக் 
கயிலாய மலைஎ டுக்கச் 
செற்றுகந் தருளிச் செய்தார் 
திருச்சோற்றுத் துறைய னாரே.
மற்றுநீர் எனத்தொடங்கும் தேவாரம்