Senthamil.Org

மற்றுநான்

தேவாரம்

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
 வள்ளலே கள்ளமே பேசிக் 
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங் 
 கொள்கையால் மிகைபல செய்தேன் 
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த 
 திருமுல்லை வாயிலாய் அடியேன் 
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய் 
 பாசுப தாபரஞ் சுடரே.
மற்றுநான் எனத்தொடங்கும் தேவாரம்