மறையோர் வானவருந் தொழுதேத்தி வணங்கநின்ற இறைவா எம்பெருமான் எனக்கின்னமு தாயவனே கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே.