Senthamil.Org

மறையிடைப்

தேவாரம்

மறையிடைப் பொருளர் மொட்டின் 
மலர்வழி வாசத் தேனர் 
கறவிடைப் பாலின் நெய்யர் 
கரும்பினிற் கட்டி யாளர் 
பிறையிடைப் பாம்பு கொன்றைப் 
பிணையல்சேர் சடையுள் நீரர் 
விறகிடைத் தீயர் வீழி 
மிழலையுள் விகிர்த னாரே.
மறையிடைப் எனத்தொடங்கும் தேவாரம்