மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக் கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும் நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல் பிறையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.